பாரிஸில் தாக்குதல்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் பிரிட்டனைச் சேர்ந்த இரு சுற்றுப்பயணிகள் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். காயமுற்றோரில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்ப தாகத் தெரிவிக்கப்பட்டது. இவர்களைக் காயப்படுத்திய ஆடவரை பிரெஞ்சுப் போலிசார் கைது செய்துள்ளனர். அவர் ஆப்கானிஸ்தானைச் சேரர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. அந்த ஆடவர் கத்தி, இரும்புக் கம்பி ஆகியவற்றைப் பயன்படுத்தி சாலையில் சென்றுகொண்டிருந்த வர்களைத் தாக்கியதாகக் கூறப் படுகிறது.

“இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று உறுதியாகக் கூறுவதற்கு தற்போது எவ்வித அறிகுறிகளும் இல்லை,” என்று அதிகாரிகள் தெரிவித்திருப்ப தாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த ஆடவர் ஒரு சிலரைத் தாக்கியதை அடுத்து, ஆடவர்கள் இருவர் அவரைத் துரத்திக் கொண்டு ஓடியதைத் தாம் பார்த்த தாகச் சம்பவம் நிகழ்ந்த இடத் துக்கு அருகில் உள்ள திரை அரங்கில் பணிபுரியும் பாதுகாவலர் தெரிவித்தார்.