‘ஜோகூர் அரச குடும்பத்தை நாங்கள் கண்காணிக்கவில்லை’

பெட்டாலிங் ஜெயா: ஜோகூர் அரசக் குடும்பத்தை மலேசிய அரசாங்கம் கண்காணிக்கவில்லை என்று அந்நாட்டின் உள்துறை துணை அமைச்சர் அசிஸ் ஜஸ்மான் தெரிவித்துள்ளார். மலேசிய அரசாங்கம் தன்னை யும் தமது குடும்பத்தையும் கண் காணித்து வருவதாக ஜோகூர் மாநிலத்தின் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் இப்ராகிம் நேற்று குற்றம் சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் துணை அமைச்சர் அசிஸ் ஜஸ்மானின் கருத்து அமைந்தது. “எனக்குத் தெரிந்த வரை ஜோகூர் அரசக் குடும்பத் தினரைக் கண்காணிக்க பக்கத் தான் ஹராப்பான் அரசாங்கத்தின் தலைமையோ அல்லது அக்கூட்ட ணியில் உள்ள கட்சிகளோ உத்தர விடவில்லை.

“இளவரசர் இஸ் மாயில் கூறுவது உண்மையானால் அதுகுறித்து அவர் எங்களிடமோ போலிசாரிடமோ தகவல் அளிக்க வேண்டும்,” என்று திரு ஜஸ்மான் கூறியதாக மலேசியாவில் வெளி யிடப்படும் மலாய் நாளிதழான சினார் ஹரியான் குறிப்பிட்டுள்ளது. இளவரசரின் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் விசா ரணை நடத்த மலேசிய அரசு தயாராக இருப்பதாகத் திரு ஜஸ்மான் கூறினார்.