தவறான வீட்டிற்குள் சென்று சுட்டுக் கொன்ற போலிஸ்

டெக்சஸ்: தன்னுடைய வீடு என்று நினைத்து மற்றொருவரின் வீட்டுக் குள் சென்றது மட்டுமல்லாது, அந்த வீட்டின் உரிமையாளரைச் சுட்டுக் கொன்ற பெண் போலிஸ் அதிகாரிக்கு எதிராக நோக்கம் இல்லாமல் மரணம் விளைவித்த குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது ஏம்பர் கெய்கர் கடந்த நான்கு ஆண்டுகளாக போலிஸ் அதிகாரியாகப் பணிபுரிந்தவர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பணி முடிந்து வீடு திரும்பிய ஏம்பர் தவறுதலாக தமது அண்டைவீட்டுக்காரரின் வீட்டுக் குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு இன்னொருவர் இருப்பதைக் கண்டதும் அவரைத் துப்பாக்கியால் சுட்டார். இதன் விளைவாக 26 வயது திரு போதம் ஷேம் ஜீன் உயிரிழந் தார். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் போலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். அவர் $300,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.