‘ஃபெடரருக்கும் நடாலுக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்’

நியூயார்க்: டென்னிஸ் விளையாட்டில் உலகின் முன்னாள் முதல்நிலை ஆட் டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச், 31, அமெரிக்கப் பொது விருதை மூன்றாவது முறை யாகக் கைப்பற்றியுள்ளார். எட்டாவது முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்த ஜோக்கோவிச் 6-3, 7-6, 6-3 என நேர் செட்களில் அர்ஜெண்டினா வீரர் யுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை வெற்றி கொண்டார். 2009ல் அமெரிக்க ஓப்பன் பட்டம் வென்ற டெல் போட்ரோ, கிராண்ட் ஸ்லாம் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டிக்கு முன் னேறியது இதுவே இரண்டாவது முறை. இதையடுத்து, ஜோக்கோவிச் வென்றுள்ள கிராண்ட் ஸ்லாம் பட்டங் களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்தது.

இதன்மூலம், முன்னாள் அமெ ரிக்க டென்னிஸ் சகாப்தமான பீட் சாம்பராசின் சாதனையை இவர் சமன் செய்தார். கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைப் பொறுத்தவரை ரோஜர் ஃபெடரர் (20), ரஃபாயல் நடால் (17) ஆகிய இருவர் மட்டுமே இப்போதைக்கு ஜோக்கோவிச்சைவிட அதிக முறை பட்டம் வென்றவர்கள்.

இப்போதைக்கு உலகத் தரவரிசை யில் நடால், ஃபெடரர், ஜோக்கோவிச் ஆகிய மூவரும்தான் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், “பத்தாண்டுகளுக்கு முன் நடால், ஃபெடரர் ஆகிய நட்சத்திரங்கள் ஆடும் காலகட்டத் தில் நானும் ஓர் அங்கமாக இருப் பதில் மகிழ்ச்சியாக இல்லை என்றே சொல்லியிருப்பேன்,” என்று ஜோக் கோவிச் சொன்னார். ஆனால், இப்போது அப்படிச் சொல்லமாட்டேன் என்றும் இவர் சொன்னார். “அவர்களுக்கு எதிராக விளை யாடுவதை விரும்புகிறேன். ஃபெடரர், நடாலுக்கு எதிரான போட்டிகளே இன்று என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளன. அவ்விருவருக்கும் நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்,” என்றார் ஜோக்கோவிச்.