பத்து ஆட்டங்களுக்குப் பின் கோலடித்த ஜிரூ; நெதர்லாந்தை வீழ்த்தியது பிரான்ஸ்

பாரிஸ்: அண்மையில் ரஷ்யாவில் நடந்த உலகக் கிண்ணப் போட்டி களில் வெற்றி மகுடம் சூடிய பிரான்ஸ் காற்பந்து அணியில் இடம்பெற்றிருந்தபோதும் அந்தத் தொடரில் ஒரு கோல்கூட போடாத தால் பெரும் ஏமாற்றமடைந்தார் தாக்குதல் வீரரான ஒலிவியே ஜிரூ. அனைத்துலக அளவில் கடை சியாகத் தான் ஆடிய பத்து ஆட் டங்களில் ஜிரூ ஒரு கோல்கூட அடிக்கவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் நெதர்லாந்து அணிக்கு எதிரான நேஷன்ஸ் கிண்ணப் போட்டியில் அற்புதமான கோலை அடித்ததன் மூலம் ஒரு வழியாக அவரது கோல் ஏக்கம் தீர்ந்தது.

உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு பிரான்ஸ் அணி சொந்த மண்ணில் ஆடிய முதல் ஆட்டம் இதுதான் என்பதால் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். உலகக் கிண்ணப் போட்டிகளில் சிறந்த இளம் ஆட்டக்காரருக்கான விருதைக் கைப்பற்றிய கிலியான் எம்பாப்பே முற்பாதி ஆட்டத்தின் 14ஆம் நிமிடத்தில் கோலடித்து பிரான்ஸ் அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். பிரான்ஸ் அணியின் கோல் பகுதியை நோக்கி பந்துடன் முன் னேற நெதர்லாந்து வீரர்கள் பெரிதும் தடுமாறினர். ஆனாலும், ரயன் பாபெல் 67ஆம் நிமிடத்தில் அடித்த கோலால் ஒருவழியாக ஆட்டம் சமனுக்கு வந்தது.

இந்த நிலையில், அடுத்த 7வது நிமிடம் ஆட்டத்தின் அற்புதத் தருணமாக அமைந்தது. சக வீரர் அனுப்பிய பந்தை மிக நேர்த்தியாக வலைக்குள் தள்ளி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார் ஜிரூ.

பிரான்சின் இரண்டாவது கோலை அடித்த ஒலிவியே ஜிரூவைப் பாராட்டும் சக வீரர்கள் எம்பாப்பே (நடுவில்), பெஞ்சமின் மெண்டி. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!