செரீனாவுக்கு அபராதம்

விதிமுறைகளை மீறியதற்காக அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்சுக்கு 17,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படுவதாக அந்நாட்டு டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்கப் பொது விருதுக்கான இறுதிப் போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாக்காவிடம் 6=2, 6=4 என நேர் செட்களில் செரீனா தோற்றுப் போனார். இதனால் 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றி சாதிக்கும் நினைப்பில் இருந்த அவரது கனவு சுக்குநூறானது. போட்டியின்போது பயிற்றுவிப்பாளரிடம் செரீனா ஆலோசனை பெற்றதாகக் கூறி, அவரை எச்சரிக்கும்விதமாக புள்ளியைக் குறைத்தார் நடுவர் கார்லோஸ் ராமோஸ். அதன்பின்னும் தரையில் மட்டையைப் போட்டு உடைத்த செரீனா, நடுவர் ராமோசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவரை ஒரு திருடர் என்றும் பொய்யர் என்றும் அவர் சாடினார். இதனால் செரீனா மீது நடுவர் நடவடிக்கை எடுக்க, ஒரு ‘கேமை’ அவர் இழக்க நேரிட்டது. இந்நிலையில், ராமோசை நோக்கி வசைமாரி பொழிந்ததற்காக US$10,000, பயிற்றுவிப்பாளரிடம் ஆலோசனை பெற்றதற்காக US$4,000, மட்டையைத் தரையில் ஓங்கி அடித்து உடைத்ததற்காக US$3,000 என மொத்தம் US$17,000 செரீனாவுக்கு அபராதமாக விதிக்கப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பார்சிலோனாவின் லயனல் மெஸ்ஸி இரு கால்களையும் உயர்த்தி யுனைடெட் கோல் கம்பத்தை நோக்கி உதைக்கிறார். நேற்றைய ஆட்டத்தில் இவர் இரு கோல்கள் போட்டு யுனைடெட்டை திக்குமுக்காட வைத்தார். படம்: ராய்ட்டர்ஸ்

18 Apr 2019

கலைந்த கனவுகளுடன் வெளியேறிய யுனைடெட்