சதமடித்து சாதனையுடன் விடைபெறும் குக்

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தொடக்கப் பந்தடிப்பாளரு மான அலெஸ்டர் குக், தமது கடைசி இன்னிங்சில் சதமடித்து, சாதனை வீரராக அனைத்துலகப் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார். லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் இந்திய அணிக்கு எதிரான கடைசி, ஐந்தாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்குமுன், அந்தப் போட்டி யுடன் அனைத்துலகப் போட்டிகளிலிருந்து தான் ஓய்வுபெறுவதாக அறிவித்தார் 33 வயதான குக். டெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங் களைக் கடந்த ஒரே வீரராக இருந்தும் முதல் நான்கு போட்டிகளிலும் அவரால் ஒர் அரை சதத்தைக்கூட அடிக்க முடியவில்லை. இதனால் அவர் கடும் நெருக்கடியில் இருந்தார்.

இந்த நிலையில், ஓய்வு முடிவை அறிவித்த குக், கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 71 ஓட்டங்களை எடுத்தார். ஜோஸ் பட்லர் 89 ஓட்டங்களைக் குவிக்க, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 332 ஓட்டங்களை எடுத்தது. அதையடுத்து பந்தடித்த இந்திய அணியில் விராத் கோஹ்லி 49, அறிமுக வீரர் ஹனுமா விகாரி 56, ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களை எடுத்தனர். இருப்பினும், இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியைவிட 40 ஓட்டங்கள் குறைவாக, அதாவது 292 ஓட்டங் களை மட்டுமே எடுத்தது. தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணி, 3ஆம் நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விருதுகளைத் தட்டிச் சென்ற தேசிய உருட்டுப்பந்து வீரர் முகம்மது ஜாரிஸ் கோ (வலது), செயிண்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப்பள்ளியின் ஹாக்கி அணித் தலைவர் ஷான் சீ (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Feb 2019

எஸ்டி சிறந்த விளையாட்டு வீரர் விருதுகள் வென்ற இளையர்கள்

ஆட்டம் முடியும் தறுவாயில் சிட்டியின் மூன்றாவது மற்றும் வெற்றி கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங் (வலது). ஸ்டெர்லிங் கின்  இந்த கோல் முயற்சியைத் தடுக்க ஷால்க கோல் காப்பாளர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
படம்: ஏஎஃப்பி

22 Feb 2019

மனந்தளராமல் போராடி வெற்றியைப் பறித்த சிட்டி