மின்னிலக்கப்படுத்தப்படும் 11 அரிய தமிழ் நூல்கள்

1863ஆம் ஆண்டில் ‘தண்ணீர் மலை வடிவேலர்’ உள்ளிட்ட, சிங்கப்பூரிலும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் செட்டல்மண்ட்ஸ்’ குடியிருப்புக ளிலும் அச்சடிக்கப்பட்டுள்ள 11 அரிய, பழைய தமிழ் நூல்களை, வேறு மொழிகளைச் சேர்ந்த பழைய நூல்களுடன் மின்னிலக்கப் படுத்தும் முயற்சியை தேசிய நூலக வாரியம் மேற்கொண் டுள்ளது. உலகெங்கிலும் உள்ள நூலகங் களிலும் அமைப்புகளிலும் உள்ள, சிங்கப்பூரின் ஆரம்பகால வரலாற் றைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட அரிய நூல்களை மின் னிலக்கப்படுத்த சிங்கப்பூர் மின் னிலக்க வள திட்டம் முனை கிறது.

இந்தத் திட்டத்தில் இது வரை 3,000க்கும் மேற்பட்ட நூல்கள் மின்னிலக்கப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு செய்யப்பட்டுள்ள நூல் களைப் பொது மக்கள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் படிக்கலாம். நூலக வாரியமும் சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகமும் இணைந்து இந்தத் திட்டத்தை 2016ஆம் ஆண்டில் உருவாக்கின. அரிய நூல்களை ஆவணப்படுத்தும் முயற்சிகளில் தேசிய நூலக வாரி யத்திற்கு எட்டு வெளிநாட்டு அமைப்புகள் உதவுகின்றன. ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், லண்டனின் ‘வெல்கம் கலெக்ஷன்’ நூலகம் ஆகியவற்றைச் சேர்ந்த அரிய நூல்களின் மின்னிலக்க வடிவம் முதலில் வெளியிடப்படும்.

சிங்கப்பூரின் முதல் ஆங்கில செய்தித்தாளான ‘சிங்கப்பூர் குரோனிக் கல்ஸ்’, ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் சேகரித்து வைத்திருந்த மலாய் கையெழுத்துப் பிரதிகள், 1877ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் அச்சடிக்கப்பட்ட முதல் மலாய் செய்தித் தாட்களில் ஒன்றான அல்ஷம்ஸ் வா அல்கமார் உள்ளிட் டவை மின்னிலக்க வடிவத்தில் வெளியிடப்படும். சீனா, மலேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, -பிரிட் டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 அமைப்புகளை இந்த முயற் சியில் இணைப்பதற்கான பல்வேறு பேச்சுவார்த்தைகளில் தேசிய நூலக வாரியம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது போன்ற அரிய நூல்கள், சிங்கப்பூர் வரலாற்றின் செழுமை யைக் காட்டுவதாக சிங்கப்பூர் நூலக வாரியத்தின் இயக்குநர் வாய் யின் பிரைக் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Jul 2019

மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் விதி மீறுவதை தடுக்க நடவடிக்கை

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடமைச் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிண்டாவின் தலைவரும்  கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி  இந்திராணி ராஜாவின் முன்னிலையில் கையெழுத்தானது.

20 Jul 2019

இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு சிண்டா, லி‌‌‌ஷா அமைப்புகளுக்கிடையே ஒப்பந்தம்