தொழில்நுட்ப கல்வி நிலைய பட்டதாரிகள் அதிகமானோருக்கு முழுநேர வேலை

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்வி நிலைய (எஸ்ஐடி) பட்டதாரிகள் அதிகமானோருக்குக் கடந்தாண்டில் முழு நேர வேலை கிடைத்துள்ளது. பல்கலைக் கழகத்தின் வருடாந்திர ஆய்வு ஒன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டின் பட்டதாரி களில் 82.9 விழுக்காட்டினருக்கு, பல்கலைக்கழக இறுதி தேர்வுகள் முடிந்து ஆறு மாதங்களிலேயே முழுநேர வேலை கிடைத்ததாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. இது 2016ஆம் ஆண்டின் 77.1% விழுக் காட்டைவிட அதிகம். ஆயினும் பட்டதாரிகளின் இடைநிலை மொத்த மாத வருமானத்தில் எந்த மாற்றமும் இல்லை. 2016ஆம் ஆண்டு போலவே, கடந்தாண்டிலும் அது $3,200 ஆக இருந்தது.

கணினி அறிவியல் பட்டதாரிகள் சிலர், $3,600க்கும் $3,800க்கும் இடையே சம்பாதிக்கின்றனர். தாதிமைத்துறை பட்ட தாரிகள், மாதம் $3,650 சம்பா திக்கின்றனர். மொத்தத்தில், கடந்தாண்டின் எஸ்ஐடி பட்ட தாரிகளில் 92.3 விழுக்காட்டினருக்கு வேலை கிடைத்தது. இந்த விகிதம் 2016ஆம் ஆண்டில் இருந்த 89% விழுக்காட்டைவிட அதிகம்.