எச்டிஎஃப்சி வங்கி அதிகாரியின் சடலம் கண்டுபிடிப்பு

மும்பை: கடந்த வாரம் காணாமல்போன எச்டிஎஃப்சி வங்கியின் உதவி தலைவர் சித்தார்த் சங்வி பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதன் தொடர்பில் கார் ஓட்டுநர் சர்ஃபராஸ் ஷேக்கை காவல்துறையினர் கைது செய் துள்ளனர். அந்த 39 வயது ஓட்டுநர், விசாரணையில் வங்கி அதிகாரி யைக் கொன்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படு கிறது. இதையடுத்து ஷேக் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சங்வியின் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் உத்தரவின் பெயரிலேயே சர்ஃப ராஸ் கொலையை செய்திருக் கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில், சங்வி உடன் பணியாற்றும் சிலரையும் காவல்துறையினர் விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ளனர்.

சங்வி கொலை செய்யப் பட்டது குறித்துப் பேசிய மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர், எச்டிஎஃப்சி ஊழியர்கள் பலரிடம் விசாரணை நடைபெறு வதாகத் தெரிவித்தார். கடந்த 2007ஆம் ஆண்டில் வங்கியில் இணைந்த சங்வி, 10 ஆண்டுகளில் மூன்று முறை பதவி உயர்வுகளைப் பெற்று துணைத் தலைவர் பதவியை எட்டினார். அவரது இந்த வளர்ச்சி பிடிக்காமல் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.