சீனாவுடன் வர்த்தகம்; மாற்றி யோசிக்கும் பாகிஸ்தான் அரசு

இஸ்லாமாபாத்: சீனாவின் பெரும் திட்டமான பல நாடுகளை உள்ள டக்கியிருக்கும் வர்த்தக இணைப்புப் பாதையில் தனக் குள்ள பங்கு குறித்து பாகிஸ்தான் மாற்றி யோசிக்கத் தொடங்கி யுள்ளது. அந்த திட்டத்தில் பங்கேற்று உள்ள நாடுகளில் சில சீனாவிடம் கடனில் மூழ்கிவிடக்கூடிய ஆபத்து உள்ளதாக கூக்குரல் எழுப்பியிருக்கும் வேளையில் பாகிஸ்தான் தனது பங்கை மறுபரி சீலனைச் செய்ய திட்ட மிட்டு வருகிறது.

இதற்காக சீனாவிடம் போடப் பட்ட ஒப்பந்தத்தை பரிசீலித்து மீண்டும் பேச்சு நடத்தவும் பாகிஸ் தான் முடிவு செய்துள்ளது என்று அந்நாட்டின் தகவல்கள் தெரி விக்கின்றன. இந்நிலையில் லண்டனைத் தளமாகக் கொண்டு செயல்படும் நாளிதழுக்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் அமைச்சர்களும் ஆலோசகர்களும் பத்து ஆண்டு களுக்கு முன்பு கையெழுத்தான சீனாவின் வர்த்தக இணைப்புப் பாதை ஒப்பந்தத்தைப் பற்றி பாகிஸ்தானின் புதிய அரசாங்கம் மீண்டும் பேச்சு நடத்த விரும்பு கிறது என்று கூறினர். அந்த ஒப்பந்தத்தின் மூலம் சீன நிறுவனங்கள் நியாயமற்ற முறையில் பலன் பெறுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.