மேன்யூ நிர்வாகிக்கு அடுத்த சோதனை

லிவர்பூல்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் எதிர் பார்த்த அளவிற்கு மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் செயல்பாடு இல்லாததால் அக்குழுவின் நிர்வாகி வேன் ஹால் எந்த நேரத்திலும் பதவிநீக்கம் செய்யப் படலாம் என்று அவ்வப்போது செய் திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், பரம எதிரியான லிவர்பூல் குழுவை அதன் சொந்த மண்ணிலேயே இன்று மேன்யூ சந்திக்கவிருப்பது அவருக்குப் பெரும் நெருக்கடி தருவதாக அமைந்துள்ளது. இவ்வார மத்தியில் நியூகாசல் யுனைடெட் குழுவிடம் 3-3 என்ற கோல் கணக்கில் மேன்யூ சமன் கண்டது. ஆனாலும் அது தோல் விக்குச் சமம் என்று வேன் ஹால் குறிப்பிட்டார்.

மாறாக, பட்டியலின் முதல் நிலையில் இருக்கும் ஆர்சனலுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் ஜோ ஆலன் அடித்த கோல் மூலம் 3-3 என லிவர்பூல் சமநிலை கண்டது வெற்றிக்கு ஈடானது என்று கொண்டாடினார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் க்ளோப். ஆயினும், இன்றிரவு நடக்க உள்ள மேன்யூ- லிவர்பூல் ஆட்டம் குறித்து அதற்கு முன்பே சிந்திக் கத் தொடங்கவிட்டதாக அவர் தெரிவித்தது அவ்விரு குழுக்கள் இடையிலான உச்ச மோதலை உணர்த்தும் வகையில் இருந்தது.

நியூகாசலுக்கு எதிராக இரு புள்ளிகளை இழந்த வருத்தத்தில் இருந்த வேன் ஹால், ஆட்டம் முடிந்தபின் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஒரு செய்தியா ளரை அவமதிக்கும் விதமாகப் பேசியதும் அவரது கவலையை அதிகரிப்பதாக அமைந்தது.

மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி வேன் ஹால். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!