2014ஆம் ஆண்டின் கிறிஸ்மஸ் விழாக் காலத்தில் வாடிக்கையாளர்கள் செலவு செய்ததைவிட கடந்த ஆண்டின் கிறிஸ்மஸ் விழாக் காலத்தில் வாடிக்கையாளர்கள் கூடுதலாக செலவு செய்தனர். கடந்த ஆண்டில் பொருளியல் வளர்ச்சி ஏறத்தாழ 2 விழுக்காடு மெதுவடைந்தபோதிலும் கிறிஸ்மஸ் விழாக் காலத்தில் வாடிக்கையாளர்கள் செய்த செலவு உயர்ந்ததாக கடன் அட்டை நிறுவனங்கள் தெரிவித்தன.
2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வாடிக்கையாளர்கள் செய்த செலவுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செய்யப்பட்ட செலவு 16 விழுக்காடு அதிகம் என்று ஒசிபிசி வங்கியின் கடன் அட்டைப் பிரிவுத் தலைவர் திரு வின்செண்ட் டான் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டின் கிறிஸ்மஸ் விழாக் காலத்தை ஒட்டி தனது மொத்த பரிவர்த்தனை எண்ணிக்கை 10 விழுக்காடு உயர்ந்ததாக விசா நிறுவனம் கூறியது.