இன்று முதல் கூடுதலாக விடப்படும் ஜோகூர்பாரு - உட்லண்ட்ஸ் ரயில் சேவை

ஜோகூர் பாருவுக்கும் உட்லண்ட்சுக்கும் இடையிலான ரயில் சேவை இன்று முதல் அதிகரிக்கப்படுகிறது. தற்போது நாளுக்கு 14 ரயில் சேவைகள் நடப்பில் உள்ளன. இந்த எண்ணிக்கை இன்று முதல் 22ஆக உயர்த்தப்படும் என்று மலேசிய ரயில் சேவையை இயக்கும் நிறுவனமான கேடிஎம் தெரிவித்துள்ளது.

ஜே.பி. செண்ட்ரலிலிருந்து உட்லண்ட்சுக்கு 12 பயணங்களும் உட்லண்டசிலிருந்து ஜோகூருக்கு 10 பயணங்களும் விடப்படும். உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள ஜோகூர் பாலத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜோகூர் பாருவுக்கும் உட்லண்ட்சுக்கும் இடையிலான இந்த ரயில் சேவை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. பயண நேரம் வெறும் ஐந்து நிமிடங்கள்.

ஜோகூர் பாருவிலிருந்து பயணம் செய்பவர்கள் 5 ரிங்கிட் (1.80 வெள்ளி) செலுத்த வேண்டும். உட்லண்ட்சிலிருந்து ஜோகூர் பாரு செல்பவர்கள் 5 வெள்ளி செலுத்த வேண்டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!