விமான நிறுவன நிர்வாகியை அறைந்த ஆந்திர எம்.பி. சென்னையில் கைது

ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகியைத் தாக்கியதற்காக ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டி (படம்) சென்னை விமான நிலையத் தில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரெட்டி ஏர் இந்தியா நிறுவனத்தில் நிர் வாகியாகப் பணியாற்றும் திரு ராஜசேகர் என்பவரின் கன்னத்தில் அறைந் ததாகக் கூறப்பட்டது.

ரெட்டியின் உறவினர்கள் தாமதமாக வந்ததால் அவர்களுக்கு 'போர்டிங் பாஸ்' வழங்க திரு ராஜசேகர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரெட்டி அவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப் பட்டது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பரில் திருப்பதி விமான நிலையத்தில் நடந்தது. ரெட்டி மீதான குற்றச்சாட் டுகள் அனைத்தும் பொய் என்றும் அதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என்றும் அப்போது மறுத்திருந் தார் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆனால், ரெட்டி திரு ராஜசேகரைத் தள்ளியதும் ஆதரவாளர்கள் பலருடன் சேர்ந்து அவரை மிரட்டியதும் சிசிடிவி காணொளியில் பதிவாகியிருந்தது. இதையடுத்து, ரெட்டி மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் தாம் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்ததும் ரெட்டி தலைமறைவாகிவிட்டார். கைதான ரெட்டி நெல்லூர் சிறையில் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப் பட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!