தடையை மீறி ஜல்லிக்கட்டு

காலங்காலமாக நடத்தப்பட்டு வரும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளபோதும் அந்தத் தடையை மீறி சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் நேற்று முன்தினம் சனிக் கிழமை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அங்குள்ள மாரியம்மன் திடலில் 65 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதாக வும் அவற்றை அடக்கும் முயற்சியில் 40 ஆடவர்கள் பங்கெடுத்ததாகவும் சொல்லப்பட்டது.

ஜல்லிக்கட்டு நடந்த திடலில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலேயே காவல் நிலையம் இருந்தபோதும் போலிசார் யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லையாம். காலை 10 மணிக்குத் தொடங்கிய அந்த நிகழ்ச்சி நண்பகல் வரை நடைபெற்றதாகவும் அது தொடர்பான காணொளி ஒன்று ஊடகத்தினருக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது. அன்பில் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக் கட்டு நடத்தப்பட்டு வருவதாக உள் ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

போட்டிக்கு இரு நாட்களுக்கு முன்பே அக்கம்பக்க கிராமங்களில் இருந்து காளைகள் அங்கு கொண்டு வரப்பட்டன. ஜல்லிக்கட்டைக் கண்டு களிப்பதற்காக 600க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் போட்டித் திடலில் கூடினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!