உபின் தீவில் இடர்காப்பு, பாதுகாப்புக் குழு அறிமுகம்

உபின் தீவின் வருகையாளர்கள் ஒன்று சைக்கிளில் பயணம் செல் வார்கள் அல்லது நடந்து தீவில் பற்பல இடங்களுக்குச் செல்வார் கள். இந்த வருகையாளர்களுக்குப் பாதுகாப்பாக சைக்கிளோட்டுவது எப்படி என்பது பற்றியும் குற்றத் தடுப்புக் குறிப்புகள் பற்றி ஆலோ சனை வழங்கவும் அவசரகாலத்தில் உடனடியாக உதவி வழங்குவதற் கும் உள்துறைக் குழுவின் சமூக ஈடுபாட்டு முயற்சியின் ஓர் அங்க மாக 'உபின் இடர்காப்பு, பாதுகாப் புக் குழு' ஒன்று அமைக்கப்பட்டுள் ளது. சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிக்லாப் குடிமக்கள் ஆலோ சனைக் குழு, தேசிய பூங்காக் கழகம் ஆகியவை இணைந்து நேற்று உபின் தீவில் இக்குழுவின் பணிகளை அறிவித்தன.

தற்காப்பு, வெளியுறவு அமைச்சு ஆகியவற்றின் மூத்த துணை அமைச்சர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான் நேற்று அந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 2014ஆம் ஆண்டில் உபின் தீவுக்கு 'சிறப்பு சரணாலயம்' எனும் அந்தஸ்து அளிக்கப்பட் டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்கால, எதிர்கால சிங்கப்பூரர்களுக்கு இத்தீவு இல் லத்தைத் தாண்டிய மற்றோர் இல்ல மாகப் பிரபலப்படுத்தப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!