2016 சிங்கப்பூர் நெடுந்தூரப் படகோட்டும் போட்டியில் 700 போட்டியாளர்கள் பங்கேற்பு

காலாங் ஆற்றில் நேற்றுக் காலையில் நடந்த 2016 சிங்கப்­பூர் நெடுந்­தூ­ரப் பட­கோட்­டும் போட்­டி­யில் இது­வரை­யில் இல்லாத எண்­ணிக்கை­யில் 700 போட்­டி­யா­ளர்­கள் பங்­கேற்­ற­னர். ஏழு வய­துக்­கும் 60 வய­துக்­கும் இடைப்­பட்ட போட்­டி­யா­ளர்­கள் தெளிந்த நீல வானின் கீழ் 'சிங்கப்­பூர் ஃப்ளை­யர்' உள்­ளிட்ட முக்கிய இடங்களைக் கடந்து 4 கிலோ­மீட்­டர் முதல் 28 கிலோ­மீட்­டர் தூரம் வரை உற்சாகமாகப் படகைச் செலுத்­தி­னர். கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்றார். அவர் தங்கப் பதக்க வெற்றியாளர்களுடன் பட கோட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.

14வது முறையாக நடை­பெ­றும் இந்தப் போட்­டி­களில் சிறுவர்­களுக்­கான பட­கோட்­டும் பிரிவில் 42 சிறுவர்­கள் பங்­கேற்­ற­னர். மெக்­ரிச்சி நீர்த்­தேக்­கத்­தில் வார இறு­தி­யில் பிள்ளை­களுக்குப் பட­கோட்­டும் பயிற்சி அளித்து வரும் 'கிட் இன் எ கயாக்' திட்­டத்­தி­னர் இந்தப் போட்டிப் பிரி­வுக்கு ஏற்பாடு செய்­தி­ருந்த ­னர். சிறு­வர்­களுக்­கான பட­கோட்­ டும் போட்­டி­யில் ஹென்­ரி­ பார்க் தொடக்­கப்­பள்­ளியைச் சேர்ந்த மேத்யூ இங், 11, முதல் இடத்தைப் பிடித்­தார். சிறு­மி­களுக்­கான பட­கோட்­டும் போட்­டி­யில் சிங்கப்­பூர் சீனப் பெண்கள் பள்­ளியைச் சேர்ந்த டான் லீ ஆன், 11, முதல் இடத்தைப் ­பி­டித்­தார்.

2016 சிங்கப்­பூர் நெடுந்­தூ­ரப் பட­கோட்­டும் போட்­டி­ நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ (இடமிருந்து இரண்டாவது) தங்கப் பதக்க வெற்றியாளர்களுடன் படகோட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார். படம்: எஸ்பிஎச்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!