முதலிடத்திற்கு முன்னேறிய லெஸ்டர் சிட்டி

பர்­மிங்­ஹம்: ஆஸ்டன் வில்­லா­வும் லெஸ்டர் சிட்­டி­யும் நேற்று அதிகாலை மோதிய இபிஎல் காற்பந்து ஆட்டம் 1=1 என்று சமநிலையில் முடிந்தது. ரியாத் மஹ்ரெஸ் பெனால்­டியைத் தவறவிட்டபோதிலும் லெஸ்டர் சிட்டி பிரி­மி­யர் லீக் பட்­டி­ய­லில் முன்னிலையை எட்­டி­ யுள்ளது. ஆட்டம் தொடங்கி 28வது நிமி­டத்­தில் லெஸ்டர் சிட்­டி ஆட்டக்காரர் ‌ஷின்ஜி ஒக­ஸாக்கி முதல் கோலைப் போட்டார். ஐந்து நிமி­டங்களுக்­குப் பிறகு, அலி சிஸ்ஸே„கோ கையால் பந்தைத் தடுத்­த­தற்­காக லெஸ்ட­ருக்கு ஒரு பெனால்டி வழங்கப்­பட்­டது. நட்­சத்­திர ஆட்­டக்­கா­ரர் மஹ்ரேஸ் பெனால்­டியை உதைத்தார்.

ஆஸ்டன் வில்லா கோல் காப்பாளர் மார்க் பன் தன் காலால் லாவ­க­மாக அதைத் தடுத்­த­தால் லெஸ்டர் வாய்ப்பைத் தவற விட்டது. இரண்டாவது பாதி ஆட்டத்தில், 76வது நிமிடத்தில் ஆஸ்டன் வில்லாவின் ரூடி ஜெஸ்டேட் ஒரு கோல் போட்டு ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வந்தார். இந்தச் சமநிலை மூலம் பிரி­மி­யர் லீக் பட்டியலில் ஒரு புள்ளி முன்னணி பெற்றுள்ளது லெஸ்டர் சிட்டி. மறுபுறம், ஆஸ்டன் வில்லா பட்டியலின் கடைசியில் தொடர்ந்து தத்தளிக்கிறது.

ஷின்ஜி ஒகஸாக்கி லெஸ்டர் சிட்டிக்கான முதல் கோலை அடித்தார். 76வது நிமிடத்தில் ஆட்டத்தைச் சமப்படுத்தியது ஆஸ்டன் வில்லா. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!