புதிய அத்தியாயத்தை தொடங்கியது ஈரான்

டெஹ்ரான்: ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளியல் தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து உலக நாடுகளுட னான ஈரான் உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்று ஈரானிய அதிபர் ஹசன் ரெளஹானி கூறியுள்ளார். ஈரானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது அவர் இதைத் தெரிவித்தார். ஈரான் அதன் அணுசக்தி செயல்பாடுகளை மட்டுப் படுத்தியுள்ளது என்பதை அனைத்துலக அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு உறுதிசெய்த பிறகு ஈரான் மீது விதிக் கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன.

சென்ற ஆண்டு ஜூலை மாதம் ஈரானுடன் காணப்பட்ட அணுசக்தி உடன்பாட்டின் நிபந்தனைகளின்படி ஈரான் நடந்துகொள்வதாக அனைத்துலக அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு சனிக்கிழமை உறுதிப் படுத்தியது. ஈரானுடன் செய்து கொண்ட உடன்பாட்டினை பல மேற்கத்திய நாடுகள் வரவேற்றன. ஆனால் இஸ்ரேலி யப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு மட்டும் அந்த உடன்பாட்டினால் பலன் எதுவும் இருக்கப்போவதில்லை என்றும் ஈரான் இன்னமும் அணுகுண்டு தயாரிக்கவே விரும்புகிறது என்றும் கூறினார். இந்நிலையில் ஈரான் மீதான பொருளியல் தடைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் நீக்கி உள்ளதைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஈரானிய அதிபர் ரெளஹானி, தடைகள் நீக்கப்பட்டது ஈரானின் பொருளியலில் திருப்புமுனை என்று குறிப்பிட்டார்.

ஈரான் மீதான தடைகள் நீக்கப்படுவதற்கு முன்பு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வியன்னாவில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவாத் ஸரீஃபுடன் பேச்சு நடத்துகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!