தீவிரவாதிகள் மீது நடவடிக்கை உறுதி

புதுடெல்லி: பதான்கோட் விமானப் படைத் தளம் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், தீவிர வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மோடி, ஷெரீப்பிடம் "பதான் கோட் தாக்குதலில் தொடர்புடைய இயக்கங்கள், தனிநபர்கள் மீது உறுதியான நடவடிக்கையை உட னடியாக எடுக்கவேண்டும்" என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

அதற்கு ஷெரீப், "தீவிர வாதிகளுக்கு எதிராக தாமத மின்றி, தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும்," என உறுதியான வாக்குறுதி அளித்ததாகப் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு தெரிவித்தது. பஞ்சாப் மாநிலம், பதான் கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தைத் தகர்க்கும் நோக்கத்தில் பாகிஸ்தான் தீவிர வாதிகள் தாக்குதல்கள் நடத்தினர். கடந்த 4 நாட்களாக நீடித்த இந் தத் தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர் களை எதிர்த்து சண்டையிட்டதில் பாதுகாப்புப் படை வீரர்கள் எழுவர் வீர மரணம் அடைந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!