ஆண்டுதோறும் அதிகாலையில் பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு வீடு திரும்பும் திரு அசோகன் காளிமுத்து, சில மணி நேர ஓய்வுக்குப் பின் காவடி ஏந்தும் உறவினர்களுடன் தைப்பூச ஊர்வலத்திலும் கலந்துகொள்வது வழக்கம். இருப்பினும், சிரமம் பாராது அதையும் முடித்துவிட்டு தைப்பூசக் கொண்டாட்டத்தில் பாதுகாப்பு தொண்டூழியராக மாலையில் உத விப் புரிய சென்றுவிடுவார் இவர். கூட்ட நெரிசல் போன்ற அசௌகரி யங்கள் இல்லாமல் தைப்பூசக் கொண்டாட்டம் சீரும் சிறப்புமாக நிறைவேறுவதற்கு உதவிக்கரம் நீட்டுபவர்களில் திரு அசோகனும் ஒருவர்.
குடும்பத்துடன் பல ஆண்டு களாக தைப்பூசத்தன்று பால்குடம் ஏந்தும் இந்த 46 வயது போலிஸ் அதிகாரிக்கு நேர்த்திகடன் முடிந்து தொண்டூழியம் புரிவது மனத்திருப்தி அளிக்கிறது. தைப்பூசம் முடிந்த அடுத்த நாளே வேலைக்குச் செல்லவேண் டிய சூழல் நிலவினாலும் கடந்த நான்கு ஆண்டுகளாக சொந்த விடுப்பில் தைப்பூச நாளன்று மனப் பூர்வமாக சேவையாற்றுகிறார் இவர். இந்த ஆண்டும் தமது வழக் கத்தில் எந்த மாற்றமும் இல்லை என உற்சாகத்துடன் கூறிய திரு அசோகன், கூடுதலாக அறி முகப்படுத்தப்பட்ட மாற்றங்களால் தைப்பூசம் இன்னும் விமரிசையாக இவ்வாண்டு நடைபெறும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவின்போது ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து பால்குடம் ஏந்திய பக்தர்கள் பெரும் திரளாக வெளியேறுகின்றனர். படம்: த. கவி