சஞ்சய் தத் விடுதலை: தகவல் கேட்கும் பேரறிவாளன்

சென்னை: பிரபல நடிகர் சஞ்சய் தத், எந்த அடிப்படையில் சிறையி லிருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகிறார் என ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளன் தகவல் கேட்டுள்ளார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற் றுள்ள சஞ்சய் தத் தற் போது மும்பை ஏரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். இந்நிலையில், நல்லொழுக்கம் காரணமாக அவர் முன்கூட்டியே சிறை யில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பேரறிவாளன் ஏரவாடா சிறைக் கண்காணிப்பாள ருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுதியுள்ள கடிதத்தில், சஞ்சய் தத் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களின் நகல்களை யும் தமக்கு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். "சஞ்சய் தத், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161ன் கீழ் முன் கூட்டியே விடுதலை செய்யப்படுகிறாரா அல்லது குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவுகளின் கீழ் அல்லது மராட்டிய மாநில சிறை விதிகளின் கீழ் விடுதலை செய்யப்படுகிறாரா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்," என்று பேரறிவாளன் கேட்டுள்ளார். தாமும் முன்கூட்டியே விடுதலையாவதற்காக இந்த விவரங்களை கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!