சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக் களை ஆதரிக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனைகள் விதிப்பது சரியல்ல என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். சரக்கு, சேவை வரி மசோதாவை ஆதரிக்க காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி யுள்ளது. இது தொடர்பாக செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சரக்கு, சேவை வரியை அமல் படுத்த திட்டமிட்டு இருக்கிறது மத்திய அரசு. வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்நடைமுறை அமலுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை யில் தாக்கல் செய்யப்பட்டு, அங்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. எனினும், மாநிலங்எ களவையில் இன்னும் நிறை வேற்றப்படவில்லை. இந்த மசோதாவுக்கு காங்கி ரஸ் தரப்பிலிருந்து இதுவரை ஆதரவு கிடைக்கவில்லை. இதன் காரணமாக மசோதாவை நிறைவேற்றுவதில் முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளது.

சரக்கு, சேவை வரி மசோ தாவில் அதிகபட்ச வரி பற்றிய வரையறையை நிர்ணயிக்க காங்கிரஸ் விரும்புவதாக அதன் துணைத் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத் திய அமைச்சர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் மீது குறை கூறினார். மசோதாக்களை நிறை வேற்ற நிபந்தனைகள் விதிப்பதை ஏற்க முடியாது என்றார் அவர். "காங்கிரசின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் சரக்கு,

சேவை வரி மசோதாவை ஆத ரிக்கத் தயார் என்று ராகுல்காந்தி கூறி இருக்கிறார். அதேநேரம் இதில் வரையறை தொடர்பாக காங்கிரஸ் எந்தப் பரிந்துரையையும் எப்போதும் செய்ததில்லை. இப்படி யொரு நிலையில் திடீரென்று இந்த மசோதாவிற்கு அக்கட்சி நிபந்தனை விதிப்பது சரி அல்ல. "பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இது தொடர் பாக சில பிரச்சினைகளை காங்கி ரஸ் எழுப்பியது. அப்போது, முன் னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் அரசின் நிலைப்பாட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி விளக்கினார்," என்றார் வெங்கையா நாயுடு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!