தேசிய சேவையாளர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படும்

தேசிய சேவையின் 50வது பிறந்த நாளை அடுத்த ஆண்டு கொண் டாட சிங்கப்பூர் தயாராகிக் கொண் டிருக்கும் வேளையில், தேசிய சேவையாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் ஆதர வளிக்கும் வகையிலும் பற்பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். மேலும், தேசிய சேவையாளர் களுக்கு அவர்களின் குடும்பங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி செலுத்தும் வகையில் குடும்பங்க ளுக்கு அன்பளிப்புகள், தேசிய சேவையாளருக்கு காப்புறுதித் திட் டங்கள் ஆகியவையும் அறிமுகப் படுத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரி வித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றக் கூட்டத் தொட ரின் தொடக்க நாளில் அதிபர் ஆற்றிய உரை மீதான தற்காப்பு அமைச்சின் பிற்சேர்க்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் இந்த விவரங்களை அமைச்சர் இங் வெளியிட்டுள்ளார். "சிங்கப்பூரின் போரிடும் அணிக்கு தேசிய சேவை முது கெலும்பாக இருந்து வந்துள்ளது. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் வளப் பத்துக்கும் நமது பாதுகாப்பும் நிலைத்தன்மையும் மிகவும் அவசி யமானவை. "சிங்கப்பூரின் தற்காப்புக்கும் பாதுகாப்புக்கும் தேசிய சேவை முக்கிய அம்சமாகத் திகழ்ந்து வருவதால், தேசிய சேவையின் அனுபவத்தை மேம்படுத்த தற்காப்பு அமைச்சு குறிப்பிடத்தக்க முத லீட்டைச் செய்யும்," என்றும் டாக்டர் இங் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!