பாரிஸ் ஹோட்டலில் தீ; உயிர் சேதம் இல்லை

பாரிஸ் நகரில் உள்ள ஒரு ரிட்ஸ் ஹோட்டலில் நேற்று பயங்கர தீ மூண்டதாகவும் தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் தீயணைப் பாளர்கள் கூறினர். புதுப்பிப்புப் பணிகளுக்காக அந்த ஹோட்டல் மூடப் பட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அந்த ஹோட்டல் கட்டடத்தின் மேல்மாடியில் தீ மூண்டதாக தீயணைப்புப் படைப்பிரிவின் பேச்சாளர் கூறினார்.

அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மூண்ட தீயை அணைக்க 60 தீயணைப் பாளர்கள் நீண்ட நேரம் போராடியதாகவும் 15 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைப்பதில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அதி காரிகள் கூறினர். அந்த ஹோட்டலின் மற்ற மாடிகளுக்கு தீ பரவாமல் தடுக்க தீயணைப்பாளர்கள் துரிதமாகச் செயல்பட்டனர்.

பாரிஸ் ஹோட்டலில் மூண்ட தீயை அணைப்பதில் தீயணைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!