முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.எஸ். சின்னதுரை காலமானார்

சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தின் முன் னாள் நீதிபதி திரு டி.எஸ். சின்ன துரை (படம்) நேற்று முன்தினம் கால மானார். அவருக்கு வயது 85. ஏட்ரியன் லிம் கொலை வழக்கு, ஜான் மார்ட்டின் தொடர் கொலை வழக்கு போன்ற பிரபலமான வழக்கு களுக்கு நீதிபதியாகப் பணியாற்றிய வர் திரு சின்னதுரை. மாவட்ட நீதி பதியாக இருந்தபோது கலவரத்தில் ஈடுபட்டதற்காக டான் வா பியாவ் என்பவருக்குத் தண்டனை வழங்கியதன் மூலம் நீதிபதி சின்னதுரை அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

இதயக் கோளாறு காரணமாக சிங்கப்பூர் பொது மருத் துவமனையில் சில காலம் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி சின்னதுரைக்கு ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையும் அளிக்கப் பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நிமோனியா காய்ச் சலால் அவர் நேற்று முன்தினம் மாலை மரணமுற்றார் என்று அவரது குடும்பத்தினர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் தெரிவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!