கட்டுப்படியாகக்கூடிய சுகாதாரப் பராமரிப்பு முறை

நாட்டின் குறிப்பிட்ட அளவிலான மனிதவளம், நிலம், நிதி வளங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சிங்கப்பூர் தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் எடுத்து சுகாதாரப் பராமரிப்பு தொடர்பில் அதிகரித்து வரும் செலவுகளின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று சுகாதார துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற சுகாதாரப் பராமரிப்பு தொழில்நுட்பம், பொறி யியல் மாநாட்டில் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய திரு சீ, "புத்தாக்கத் தின் அடிப்படையில் அரசாங்கம் சுகாதாரப் பராமரிப்புக் கழகங் களை ஒருங்கிணைத்து வருவதால் சுகாதாரப் பராமரிப்புத் துறை கட் டுப்படியாகக்கூடிய செலவுகளைக் கொண்ட ஒன்றாகக் கட்டிக்காக் கப்பட்டு வருகிறது," என்றார்.

"உதாரணத்துக்கு, அனைத்து நோய்களுக்கான சிகிச்சை பிர தான மருத்துவமனைகளில் அளிக்கப்படுமேயானால், சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் அதிக ரித்துக் கொண்டே இருக்கும்," என்று அமைச்சர் விளக்கினார். தகுந்த சூழ்நிலையில் பராமரிப்பு அளிக்கப்படுவதை உறுதி செய்ய, பிரதான மருத்துவமனைகளுக்குப் பக்கத்தில் சமூக மருத்துவமனை கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மருத்துவ ஆய் வுக் கூடங்கள், தகவல் தொழில் நுட்ப முறைகள் போன்ற வளங் களைச் சுகாதாரப் பராமரிப்புக் கழகங்கள் பகிர்ந்துகொள்ளலாம் என் றும் திரு சீ கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!