தைப்பூசத் திருவிழாவுக்கென உருவாக்கப்பட்டுள்ள சிறப்புப் பாடல்

வில்சன் சைலஸ்

புக்கிட் தீமா, செங்காங், ஜூரோங், யீ‌ஷூன், டேங் ரோடு என சிங்கப்பூரில் உள்ள முருகன் கோயில்களின் பட்டியலை ஒரே பாடலில் இணைத்து சிங்கப்பூ ருக்கே உரிய தைப்பூசக் காவடிப் பாடலை உருவாக்கியுள்ளனர் சிங்கப்பூரர்கள் மூவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு தைப்பூசத் திருவிழாவில் இசை வாசிப்பதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டதற்கும் சிங்கப் பூரில் உள்ள முருகன் திருத்தலங் களுக்குச் சமர்ப்பணமாகவும் இந்தப் பாடல் அமைந்துள்ளது என்றார் பாடலுக்கு வரிகள் அமைத்த 23 வயது நித்திஷ் செந்தூர்.

'சிம்' பல்கலைக்கழக மாண வரான இவர், மலேசியா போன்ற அண்டை நாடுகளில் ஆண்டு தோறும் இயற்றப்படும் காவடிப் பாடல்களின் மூலம் சிங்கப்பூர் சூழலுக்கு ஏற்ப ஒரு காவடிப் பாடலை அமைக்கவேண்டும் என்ற எண்ணம் பிறந்ததாக சொன்னார். பல நாட்களாக இருந்த எண்ணம் ஈடேறியதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டுள்ள நித்திஷ், சிறு வயதிலிருந்து பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடனைச் செலுத்தியுள்ளார். "தேசிய சேவையைத் தொடங் கியதிலிருந்து பால் காவடி ஏந்தி பிரார்த்தனை செய்து வரு கிறேன். இதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் பாடலுக்கு வரிகள் அமைக்க உதவியாக இருந்தன," என்றார் அவர்.

இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவுக்காகவே சிறப்பாக இந்தப் பக்திப் பாடலை இயற்றியிருக்கும் திரு நித்திஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!