‘ஓ’ நிலை முடிவுகள்: கல்வியில் முன்னேற குடும்பப் பிரச்சினைகள் தடையில்லை

சுதாஸகி ராமன்

படிப்பதற்கேற்ற சூழல் வீட்டில் இல்லாதபோதிலும் தம்மால் படிப்பில் அக்கறை செலுத்தி வெற்றி அடையமுடியும் என்று நிரூபித்துள்ளார் சிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளி மாணவி சர்மிணி ராமகிருஷ்ணா, 16. உயர்நிலை நான்கின் ஆரம்ப கட்டத்தில் பெற்றோர் விவாகரத்து பெற்றதிலிருந்து பாடங்களில் கவனத்தைச் செலுத்த முடியாமல் போராடினார் சர்மிணி. அத்துடன், தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலால் மற்ற மாணவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழகாமலும் தாயாருடன் பேசாமலும் இருந்ததுடன் பள்ளிக்குச் செல்லாமல் காலத் தைக் கழித்து வந்தார்.

சர்மிணியின் நடத்தையைக் கவனித்து வந்த அவரது வகுப்பு ஆசிரியர் போலின் வோங், அவரது தாயார் திருவாட்டி சு.அன்னத் தாயைப் பள்ளிக்கு வரவழைத்தார். இருவரையும் அவர்களது பிரச் சினைகளைப் பற்றிப் பேச வைத்து அவற்றிற்கான தீர்வுகளைக் காண வைத்தார் குமாரி வோங். வீட்டில் படிக்க முடியாமல் தவித்த சர்மிணி, சிராங்கூன் கார்டன் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இரவு நேர கூடுதல் வகுப்புகளுக்குச் சென்று பள்ளி நூலகத்திலேயே படித்தார்.

தமிழாசிரியை அ‌ஷிகா சித்திகா ரஜித் அகமது உடன் உரையாடும் புனிதா லட்சுமி, சர்மிணி ராமகிருஷ்ணா (வலக்கோடி). படம்: சிராங்கூன் கார்டன் உயர்நிலைப்பள்ளி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!