தமிழ்மொழி நிலைய பொங்கல் திருவிழா

­­­­­­­­­வனிதா மணி­­­ய­­­ரசு

மா­ண­வர்­களின் பிரிக்­க­மு­டி­யாத அங்கமா­கி­விட்ட கைபே­சி­களின் வழியாக பாரம்ப­ரி­யம் மிக்க பொங்கல் திரு­நாளைப் பற்­றி­யும் தமிழர் பண்பாடு பற்­றி­யும் அறிந்­து­கொள்ள ஆவன செய்தது உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் திருவிழா. உம­­­றுப்­­­பு­­­ல­­­வர் தமிழ்­­­மொழி நிலை­­­ய­­­மும் எட்டு உயர்­­­நிலைப் பள்­­­ளி­­­களும் இணைந்து இவ்­­­வி­­­ழா­ விற்கு ஏற்பாடு செய்­­­தி­­­ருந்த­­­ன. புதுமை­­­யான முறை­­­களில் கற்­­­பித்து மாண­­­வர்­­­களிடையே பொங் கல் பற்றிய விழிப்­­­பு­­­ணர்வை ஏற்­­­படுத்­­­து­­­வதே விழாவின் முக்கிய நோக்கம். மாண­­­வர்­­­கள் அனு­­­ப­­­வத்­­­தின் வழி கற்க பல வித்­­­தி­­­யா­­­ச­­­மான நட­­­வ­­­டிக்கை­­­கள் இருந்தன.

கூடிப் பொங்கல் வைத்தல், மண்பானை அலங்க­­­ரித்­­­தல், மின்னூல் தயார் செய்தல் போன்ற நட­­­வ­­­டிக்கை­­­கள் பொங்கல் பற்றிய பல விஷ­­­யங்களை மாண­­­வர்­­­களுக்­­­குப் புகட்­­­டின. பொங்கல் செய்யப் பயன்­­­படுத்­­­தப்­­­படும் உணவுப் பொருட்­­­களுக்­ கான பாரம்ப­ரிய விளக்­கம், உழ­­­வர்­­­களின் முக்­­­கி­­­யத்­­­து­­­வம் போன்ற­­வை மாண­­­வர்­­­களுக்கு உணர்த்தப்பட்டது. பழங்கா­­­லத்­­­தில் ஏட்­­­டுக்­­­கல்வி மட்­­­டு­­­மின்றி கலை­­­களுக்­­­கும் தமி­­­ழர்­­­கள் அதிக முக்­­­கி­­­யத்­­­து­­­வம் அளித்­­­த­­­னர் என்பதை உணர்த்­­­தி­­­யது மண்பானை அலங்க­­­ரிப்பு நட­­­வ­­­டிக்கை. 'வேர்­­­களைத் தேடி' என்ற புதையல் வேட்டை அங்கம் மாண­­­வர்­­­களை மிகவும் உற்­­­சா­­­கப்­ படுத்­­­தி­­­யது. தொழில்­­­நுட்­­­பம் சார்ந்த இந்த அங்கத்­­­தில் மாண­­­ வர்­­­கள் மிகுந்த ஆர்­­­வத்­­­து­­­டன் ஈடு­­­பட்­­­ட­­­னர். மூலிகைத் தோட்டம், திரு­­­வள்­­­ளு­­­வர் சிலை, இந்திய மர­­­புடைமை­­­ய­­­கம், நூலகம் போன்ற இடங்களில் விளை­யாட்­டுக்­கான துப்­­­பு­­­கள் ஒளித்து வைக்­­­கப்­­­ பட்­­­டி­­­ருந்தன. கைபே­­­சி­­­யில் இருக்­­­கும் ஸ்கேனர் குறியீடை பயன்­­­படுத்தி மாண­­­வர்­­­கள் விடையைக் கண்ட­­­றிந்த­­­னர்.

ஆசிரியருடன் சேர்ந்து கும்மியும் அடித்து மகிழ்ந்தனர் மாணவர்கள். படங்கள்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!