“சுந்தர்.சி. பயமுறுத்தும் கலையில் கெட்டிக்காரர்”

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் 'அரண்மனை'. திகில் படமான இது பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து தெலுங்கில் 'சந்திரகலா' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து இப்படத்தை வெளியிட்டனர். தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து 'அரண்மனை 2' என்ற பெயரில் சுந்தர்.சி இயக்கிய புதிய படமும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தையும் தெலுங்கில் 'கலாவதி' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து சுந்தர்.சி வெளியிடுகிறார். வரும் 23ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

'கலாவதி' படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. தெலுங்கானா திரைப் படத் தயாரிப்பாளர் தில்ராஜ் இசை குறுந்தகட்டை வெளியிட்டார். விழா வில் சுந்தர்.சி, குஷ்பு, நடிகர் சித்தார்த் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் படத்தின் நாயகன் சித்தார்த் உற்சாகமாகப் பேசினார். "ரஜினி, கமல் ஆகியோரை வைத்துப் படம் தயாரித்த சுந்தர்.சி தற்போது என்னைப் போன்ற நடி கர்களை வைத்தும் வெற்றிப் படங்களை இயக்கி வருகிறார். பயமுறுத்தும் கலையில் அவர் கெட்டிக்காரர். திகில் படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்.

'அரண்மனை 2' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!