தீவிரவாதச் சிந்தனையை வளர்த்துக்கொண்ட கட்டுமானத் துறை ஊழியர்கள் 27 பங்ளாதே‌ஷியர் கைது

சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வந்த பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த 27 பேர் உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் 'ஜிஹாத்' எனும் ஆயுதமேந்தி புனிதப்போர் நடத்தும் அல்-காய்தா, 'ஐஎஸ் ஐஎஸ்' போன்ற பயங்கரவாத அமைப்புகளின் செயல்களை ஆதரித்து வந்ததாகத் தெரிய வந்தது.

அவர்களில் சிலர் வெளிநாடு களில் செயல்படும் 'ஜிஹாத்' குழுக்களுக்கு நிதியுதவி அளிக்க எண்ணியிருந்ததாகத் தெரிவித்த உள்துறை அமைச்சு, ஆனால் அவர்கள் சிங்கப்பூரில் எவ்வித பயங்கரவாத தாக்குதலுக்கும் திட்ட மிடவில்லை என்றும் நேற்று தனது அறிக்கையில் கூறியது. இந்த 27 பேரும் கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதிக்குள் கைது செய்யப்பட்டனர்.

தடுத்து வைக்கப்பட்ட 27 பேரில் 26 பேர் ஒரே சமயக் கல்விக் குழு வைச் சேர்ந்தோர் என்றும் அவர்கள் அமெரிக்க, ஏமானிய இஸ்லாமிய விரிவுரையாளர் அன்வர் அல்=அவ் லக்கியின் தீவிரவாதச் சிந்தனை களிலும் சுய தீவிரவாதச் சிந்தனை பற்றிய போதனைகளிலும் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்றும் தெரி விக்கப்பட்டது. கைது செய்யப்பட்டோரில் எஞ் சியுள்ள ஒருவர், 26 பேர் அங்கம் வகித்த குழுவின் உறுப்பினரல்ல. ஆனால், அவரும் சுயமாக தீவிர வாதச் சிந்தனையை வளர்த்துக் கொண்டிருந்தார் என்று கண்டு பிடிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!