தைப்பூசத்திற்கு கூடுதல் சாலை வழிகாட்டித் தொண்டர்கள்

இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவில் சென்ற ஆண்டைவிட கூடுதலான சாலை வழிகாட்டித் தொண்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். கடந்த ஆண்டு 672ஆக இருந்த அந்த எண்ணிக்கை இவ் வாண்டு 849ஆக அதிகரித்து உள்ளது. சாலை வழிகாட்டித் தொண்டர் களின் ஒருங்கிணைப்பாளரான திரு ஆர். சுரேஷ் இந்த விவரங்களைத் தமிழ் முரசிடம் தெரிவித் தார்.

தைப்பூசத்திற்கு முந்தைய நாள் இரவு 8 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் பின்னிரவு வரை மாறுவிகித நேர அடிப்படையில் தொண்டர்கள் ஆறு மணிநேரம் பணியில் இருப்பர். சிண்டா, மக்கள் கழக நற்பணிப் பேரவை, இதர இந்துக் கோயில்கள் உட்பட பத்து அமைப் புகள் முன்வந்து தங்கள் மனிதவளத்தை வழங்கியுள்ளதாக திரு சுரேஷ் கூறினார்.

18 வயது மாணவர்கள் முதல் 69 வயது முதியோர் வரை அவரவர் ஆற்றல், வலிமைக்கு ஏற்ப பொறுப்பு வழங்கப்படும். காவடி ஊர்வலம் சுமூகமாகச் செல்வதை உறுதிசெய்வது சாலை வழிகாட்டித் தொண்டர்களின் தலையாயப் பணி. அதே வேளையில், அவர்களது பாதுகாப்புக்கும் உடல்நலத் துக்கும் முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளதாக சுரேஷ் குறிப்பிட்டார். சுமார் நான்கு கிலோ மீட்டர் காவடி ஊர்வலப் பாதையின் நெடு கிலும் நான்கு ஓய்வு இடங்கள் தொண்டர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. அங்கு சென்று உணவு உண்ணவும் தண்ணீர் அருந்தவும் சற்று இளைப்பாறவும் முடியும்.

இவ்வாண்டு தைப்பூசத் திரு விழாவில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தொண்டர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக சுரேஷ், 39, தெரிவித்தார். "திருவிழாவின்போது பக்தர்களையும் பொதுமக்கள் கூட்டத்தையும் கையாள்வதில் புன்னகை யுடன் பணிவான முறையில் ஆலோசனை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்," என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!