கும்பலோடு வன்முறை; இருவருக்கு பிரம்படி, சிறைத் தண்டனை

கும்பலோடு வன்முறையிலும் கல வரத்திலும் ஈடுபட்ட இருவருக்கு நேற்று சிறை, பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டது. ஜெய் கணேஷ் தனபாலன், 25, தினேஷ் குமார் ரவி, 25 ஆகிய இருவருக்கும் முறையே ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, நாலரை ஆண்டுகள் சிறைத் தண் டனையும் தலா ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன என்று சேனல் நியூஸ் ஏ‌ஷியா செய்தி குறிப் பிட்டது. நீதிமன்றத்தில் தம் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டு களையும் ஜெய் கணேஷ் ஒப்புக் கொண்டார். அவற்றில் கலவரத் தில் ஈடுபட்ட இரண்டு குற்றச் சாட்டுகளும் அபாயகரமான ஆயுதத்தால் தாக்கி காயம் விளைவித்த ஒரு குற்றச்சாட்டும் அடங்கும். தினேஷ், பயங்கர ஆயுதத்துடன் கலவரத்தில் ஈடு பட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்.

கடந்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதி விடியற்காலை ஜெய்யும் தினே‌ஷும் நால்வருடன் சேர்ந்து இரண்டு பேரைத் தாக்கினர். அதி காலை 3.00 மணியளவில் ரோண்டவூ ஹோட்டலில் உள்ள செக்மேட் கிளப்பிலிருந்து நண்பர் களுடன் வெளியேறிய அவர்கள் கலவரத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டனர். அப்போது ஜெய்யும் தினே‌ஷும் நண்பர்களும் லோ கேஸ்வரன் சுப்ரமணியம், ச‌ஷி குமார் அசோகன் ஆகிய இரு வரையும் தாக்கினர்.

தினேஷ் தமது ஜீன்சின் இடுப்பிலிருந்து அரிவாளை எடுத்து லோகேஸ் வரனின் கையை வெட்டினார். அடுத்த சில நிமிடங்களில் ஆறு பேரும் இரண்டு டாக்சிகளில் ஏறி தப்பிவிட்டனர். டாக்சி நிறுத்து மிடத்தில் அரை மயக்கத்தில் உட் கார்ந்து இருந்த லோகேஸ்வரனை அவரது மனைவியும் ச‌ஷியும் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்த்தனர். லோகேஸ்வரனுக்கு கத்தியால் வெட்டப்பட்ட காயங் களுக்கு அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!