மாணவர்களுக்கு புதிய கலைக் கல்வி

மாணவர்களுக்கு புதிய கலைக் கல்வி தொடக்கப்பள்ளி மாணவர் களுக்கு புதிய கலைக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் உள்ள கலைப் படைப்புகளை மாணவர் கள் புரிந்து கொள்ளும் நோக்கத் துடன் இந்தக் கலைக் கல்வியை தேசிய கலைகள் மன்றத்தின் பொது கலை அறக்கட்டளையும் 'ஆர்ட் அவுட்ரீச்' என்ற லாப நோக்கற்ற அமைப்பும் தொடங் கியிருக்கின்றன. நேற்று முன்னோட்ட கல்வி சுற்றுலாவில் மூன்று பள்ளிகளைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாண வர்கள் பங்கேற்றனர். சிங்கப்பூர் கலைஞர் உருவாக் கிய மூன்று கலைப் படைப்புகளும் சுற்றுலாப் பாதையில் இடம்பெற்று உள்ளன.

சிங்கப்பூரின் பொன்விழா கொண்டாட்டத்தை ஒட்டி சிங்கப் பூர் கலைஞர்கள் இந்தக் கலைப் படைப்புகளை உருவாக்கியிருந் தனர். இவற்றில் 'சிங்கப்பூரில் 24 மணி நேரம்' என்ற தலைப்பில் கலைஞர் பாயேட் இயோக் குவான் உருவாக்கிய சிங்கப் பூரின் முதல் நீண்ட ஒலி வேலைப் பாடும் அடங்கும்.

சிங்கப்பூரின் அன்றாட வாழ்க் கையைப் படம்பிடித்துக் காட்டும் வகையில் குடியிருப்பு வட்டாரங் களில் போக்குவரத்து, எம்ஆர்டி ரயில்களின் சத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சமாகும். ஹான் சான் போர், கும் சீ கியோங், டான் வீ லிட் போன்ற கலைஞர்களின் படைப்புகளும் மாணவர் கலைக் கல்வியில் இடம்பெற்றுள்ளன. ஆர்ட் அவுட் ரிச் உருவாக்கிய புதிய பாடத் திட்டத்தின்கீழ் பல்வேறு கலைப் படைப்புகளைப் பற்றி மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும்.

அட்மிரல்டி தொடக்கப்பள்ளி மாணவர்களில் ஒருவரான இம்மானுவெல் பாலா (இடம்), வயது 10, ஹான் சாய் போர், கும் சீ கியோங் ஆகிய இரு கலைஞர்களின் கலைப் படைப்புகளைப் பற்றி குறிப்பு எழுதுகிறார். தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலைப் படைப்புகளைப் புரிந்து கொள்வதற்காக புதிய கலைக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!