முக்ரிஸை வெளியேற்ற கெடா அம்னோ முயற்சி

அலோர் ஸ்டார்: கெடா மாநில முதலமைச்சர் முக் ரிஸ் மகாதீரின் தலைமைத்துவத்தில் தாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக அம்மாநில அம்னோ தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். கெடா மாநில தலைமைத்து வத்தில் மாற்றம் செய்யக் கோரி அனைத்து அம்னோ பிரிவு தலைவர்களும் பிரதமர் நஜிப் ரசாக்கிடம் கேட்டுக் கொண் டிருப்பதாக கெடா அம்னோ துணைத் தலைவர் அகமட் பாஷா, செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

முதலில், கெடாவில் எல்லா நிலைகளிலும் கட்சித் தலைமைத் துவத்தை ஐக்கியப்படுத்த முக்ரிஸ் தவறிவிட்டார் என்று அவர் சொன் னார். இரண்டாவதாக, அடுத்து வரும் 14வது பொதுத்தேர்தலை எதிர் கொள்ள கட்சியின் வியூகத்தை திட்டமிடத் தவறிவிட்டார் என்று அகமட் பாஷா குற்றம் சாட்டினார். கெடா தலைமைத்துவ பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர், கட்சி யின் செயல்பாடுகளை முன்நின்று அவர் வழிநடத்தவில்லை என்றும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் அரசாங்கத்தை ஆக்ககரமாக நிர்வகிக்கவில்லை என்றும் எனவே மாநில அம்னோ தலைமைத்துவத்தில் மாற்றம் செய்வதோடு, முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்றும் பிரதமருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மற்றொரு நிகழ்ச்சியில் முக்ரிஸை சந்தித்தபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டதாக தகவல்கள் கூறின.. மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரின் மகனான முக்ரிஸ் 2013ஆம் ஆண்டு முதல் கெடா மாநில முதலமைச்சராக இருந்து வருகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!