இந்தியாவுக்கு மீண்டும் ஏமாற்றம்

கேன்பரா: இந்தியா - ஆஸ்தி ரேலியா அணிகள் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது. ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பராவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வாகை சூடியது. ஏற்கெனவே மூன்று ஆட்டங்களில் தோற்று தொடரை இழந்த இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்குடன் களமிறங்கியது. பூவா தலையாவில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்தடித்தது. சிறப்பான தொடக்கம் கொடுத்த வார்னரும் ஃபிஞ்சும் இந்திய அணியின் பந்துவீச்சை ஓரங்கட்டினர். இவர்கள் ஜோடி சேர்ந்து 187 ஓட்டங்கள் எடுத்தனர். வார்னர் 93 ஓட்டங்களிலும் ஃபிஞ்ச் 107 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்த வீரர்களும் சக்கைப் போடு போட, அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 348 ஓட்டங்களைக் குவித்தது. ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்மித் 51 ஓட்டங்களும் மேக்ஸ்வேல் 41 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணியில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளும் யாதவ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி னர். இதையடுத்து, 349 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக் குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, ‌ஷிகர் தவான் இருவரும் அற்புதமாக ஆடினர்.

இந்த ஜோடி 65 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், ரோகித் சர்மாவை ரிச்சர்ட்சன் வெளியேற்றி னார். ரோகித் 25 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 41 ஓட்டங்கள் விளாசினார். இதையடுத்து, ‌ஷிகர் தவா னுடன் விராத் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். ஆட்டம் விறுவிறுப் படைந்தது. இருவரும் ஆஸ்தி ரேலிய பந்துவீச்சை அனைத்து திசைகளிலும் பறக்கவிட்டனர். ஃபால்க்னர் வீசிய 25வது ஓவரின் முதல் பந்தில் கோஹ்லி 103 மீட்டர் உயரத்துக்கு சிக்சர் அடித்து ரசிகர்களை உற்சாகப் படுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!