லிவர்பூலுக்கு வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுத்த ஜோர்டன்

இங்­கி­லாந்து: கேப்­பிட்­டல் ஒன் என்னும் லீக் கிண்ண இறு­திப்­போட்­டி­யில் பங்­கு­பெ­றும் பொன்னான வாய்ப்பை லிவர்­பூல் அணிக்­குப் பெற்­றுத் தந்­துள்­ளார் மாற்­றாக அந்த அணியில் சேர்ந்த ஆட்­டக்­கா­ரர் ஜோர்­டன் ஐப். மத்­திய இங்­கி­லாந்­தில் உள்ள பிரிட்­டா­னியா விளை­யாட்­ட­ரங்­கில் நேற்று கேப்­பிட்­டல் ஒன் கிண்­ணத்­திற்­கான முதல் சுற்று ஆட்டம் நடை­ பெற்­றது. அந்த ஆட்­டத்­தில் லிவர்­பூல் அணி, ஸ்டோக் சிட்டி அணி­யு­டன் பொரு ­தி­யது. ஆட்­டத்­தின் முதற்­பா­தி­யி­லேயே மத்­திய திடல் ஆட்­டக்­கா­ர­ரான பிலிப் கோட்­டின்­ஹோ­வும் தற்­காப்பு ஆட்­டக்­கா­ர­ரான டேஜன் லோவ்­ரெ­னும் காலில் ஏற்­பட்ட காயங்களுக்­காக ஆட்­டத்­­தில் இ­ருந்து வெளி­யாக நேர்ந்தது.

பிலிப் கோர்ட்­டின்­ஹோ­வுக்­குப் பதி­லாக மாற்று ஆட்­டக்­கா­ர­ராக ஜோர்­டன் ஐப்­பும், டேஜன் லோவ்­ரெ­னுக்குப் பதிலாக மாற்று ஆட்­டக்­கா­ர­ராக ஜேம்ஸ் மில்­நெ­ரும் சேர்க்­கப்­பட்­ட­னர். இந்த வெற்­றி­யின் மூலம் லிவர்­பூல் அணி இன்­னும் மூன்று வாரங்களில் நடக்­க­வி­ருக்­கும் இரண்டாம் சுற்று ஆட்­டத்­தில் மீண்டும் ஸ்டோக் சிட்டி அணியுடன் பொருதும். அந்த ஆட்டத்தில் வெல்லும் அணி, எவர்ட்­டன் அல்லது மான்­செஸ்டர் சிட்டி அணி­யு­டன் வெம்பிளியில் நடக்க­விருக்கும் இறுதி ஆட்டத்தில் பொரு­தும்.

ஸ்டோக் சிட்டி அணி அண்மை­யில் செல்சி, மான்­செஸ்டர் சிட்டி, மான்­செஸ்டர் யுனை­டெட் ஆகிய அணி­களு­டன் பொரு­தியபோது அபார ஆற்­றலை­யும் வேகத்தையும் வெளிப்­படுத்­திய அணி­யா­கத் திகழ்ந்தது. ஆனால் நேற்று நடந்த இந்த ஆட்­டத்­தில் அந்த ஆற்றலை வெளிப்­படுத்த தவறி விட்­ட­தா­கக் கூறப்­படு­கிறது.

'கேப்பிட்டல் ஒன்' கிண்ண முதல் சுற்று ஆட்டத்தின் அரை இறுதி ஆட்டம் நேற்று மத்திய இங்கிலாந்தின் பிரிட்டானியா விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் ஸ்டோக் அணியை லிவர்பூல் அணி 1=0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இரண்டாம் சுற்றுக்குள் காலடி எடுத்து வைக்கவுள்ளது. ஸ்டோக் சிட்டியின் கோல் காப்பாளரான ஜேக் பட்லேண்ட்=ஐ (நடுவில்) திணறடித்த லிவர்பூல் அணியின் மத்திய திடல் ஆட்டக்காரர் ஜோர்டன் ஐப் (இடது).

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!