பத்துமலையில் தீவிர பாதுகாப்பு

வரும் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் தைப்பூசத் திருவிழாவை ஒட்டி மலேசியாவின் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. "எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் போதுமானதற்கும் அதிகமான போலிசார் அங்கு குவிக்கப்பட்டுள் ளனர்," என்று சிலாங்கூர் போலிஸ் தலைவர் அப்துல் சமா மட் தெரிவித்தார். இதுவரை மிரட்டல் எதுவும் வரவில்லை என்றாலும் போலிஸ் அப்பகுதியில் அதிக கவனம் செலுத்தும் என்று திரு அப்துல் செய்தியாளர்களிடம் கூறினார்.

பாதுகாப்பு தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரும் கோம்பாக் போலிசும் பலமுறை சந்தித்துப் பேசியதாக அவர் குறிப்பிட்டார். செந்துல் மாவட்ட போலிஸ் துணை ஆணையர் ஆர் முனுசாமி கூறுகையில், "தைப்பூசத் திருவிழாவின்போது பெருங் குழப்பத்தை உண்டாக்க ஐஎஸ் போராளிகள் திட்டமிட்டுள்ளதாகப் புகார்கள் வந் ததை அடுத்து பத்துமலையில் ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்," என்றார்.

ஆலயப் பகுதியில் பயங்கரவாதிகளைப் போல தோற்றமளித்த சிலர் நடமாடியதாக அண்மையில் தகவல் வெளியானது. தைப்பூசத்தை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்துமலையில் கூடுவர். அதற்கு முதல்நாளான நாளை சனிக்கிழமை மாலையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!