முக்ரிஸ் நீக்கப்பட்டால் அம்னோ பிளவுபடும்

கோலாலம்பூர்: கெடா மாநில முதலமைச்சர் முக்ரிஸ் மகாதீரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கெடா கட்சித் தலைவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டால் அம்னோ கட்சி மிகப் பெரிய பிளவை எதிர் நோக்கும் என்று அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் எச்சரித்துள்ளார். 'கெடா மக்கள் நலனுக்காக அல்லாமல் குறிப்பிட்ட ஒரு தரப்பினரின் சொந்த அரசியல் நோக்கத்திற்காக, முதலமைச்சர் பதவியிலிருந்தும், மாநிலத் தொடர்புக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்தும் முக்ரிஸ் மகாதீர் நீக்கப்படுவாரேயானால் இது கெடா மக்களுக்கும் மாநில அம்னோவுக்கும் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்துவதோடு, கட்சி மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக சரிவதற்கும் காரணமாகிவிடும் என முன்னாள் துணைப் பிரதமரான முகைதின் யாசின் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கெடா மாநில அம்னோ பிரிவினர், முதலமைச்சர் பதவியி லிருந்து முக்ரிஸ் மகாதீரை நீக்க வேண்டும் என கெடா மாநில அம்னோ தலைவர்கள் வலியுறுத்தி இருப்பது தமக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் திரு முகைதின் யாசின் கூறியுள்ளார். முக்ரிஸ் மிகவும் நேர்மையானவர் என்றும் செல்வாக்கு மிக்கவர் என்றும் வர்ணித்த திரு முகைதின் யாசின், கெடா அம்னோ தலைவர்களின் கோரிக்கையை அம்னோ தலைமைத்துவம் ஏற்றுக் கொண்டால் கட்சி மீதான மக்களின் நம்பிக்கை சரிவு காணும் என எச்சரித்தார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரு முக்ரிஸ் மகாதீரின் ஆதரவாளர்கள் கெடா அம்னோ தலைமையகத்திற்கு முன்பு ஒன்றுகூடினர். படம்: தி ஸ்டார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!