ஐந்தில் இருவருக்கு பணி ஓய்வில் நம்பிக்கையில்லை

ஐந்து சிங்கப்பூரர்களில் இருவருக்கு தங்கள் பணி ஓய்வுக்கான தயார்நிலை குறித்து நம்பிக்கையில்லை என டிபிஎஸ் வங்கியும் மெனுலைஃப் காப்புறுதி நிறுவனமும் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 40 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களின் வேலை ஓய்வு குறித்த மனப்போக்கு, எதிர் பார்ப்புகள், தயார்நிலை ஆகியவற் றில் அந்த ஆய்வு கவனம் செலுத் தியது. சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இந்தியா, இந்தோனீசியா, தைவான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 40க்கும் 60 வயதுக்கும் இடைப் பட்ட 6,000 பேரிடம் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரம், சொத்து, சமூக அம்சங்கள் என்ற அடிப்படையில் இந்த ஆய்வு 100 புள்ளி விகிதத் தில் நடத்தப்பட்டது. ஆக அதிக புள்ளிகள் என்றால் பதவி ஓய் வுக்கு அவர்கள் நல்ல தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இந்த அடிப்படையில் பார்த் தால், சிங்கப்பூர் 100 புள்ளிகளில் 46 புள்ளிகள் எடுத்தது. வட்டார அளவிலான சராசரி புள்ளிகள் 56 என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று அம்சங்களில் சிங்கப்பூர் ஆகக் குறைவாக சொத்துகள் பிரி வில் 35 புள்ளிகளையே எடுத்திருந் தது. அப்படி என்றால் பதவி ஒய்வு பெறுவதற்கு அவர்கள் நிதி அளவில் தயாராக இல்லை என்பது புலப்படுகிறது. சுகாதாரப் பிரிவில் 54 புள்ளிகளையும் சமூக அம் சங்கள் பிரிவில் 49 புள்ளிகளையும் சிங்கப்பூர் பெற்றது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!