மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய கிறிஸ் கெயில்

சிட்னி: சிறந்த அதி­ரடி பந்த­டிப்­பா­ளர்­களில் ஒரு­வர் கிறிஸ் கெய்ல். வெஸ்ட் இண்­டீசை சேர்ந்த இவர் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்போர்னில் நடை­பெற்று வரும் பிக்­பாஷ் 20 ஓவர் போட்­டி­யில் விளை­யாடி வரு­கிறார். இந்தப் போட்­டி­யின் இடையே ஆஸ்­தி­ரே­லிய தொலைக்­காட்சி ஒன்­றின் பெண் நிரு­பர், மெக்­மெக்­லின் கெய்­லி­டம் பேட்டி எடுத்­தார். அப்­போது கிரிக்கெட் வீரர் கெய்ல், அவரைப் பேட்டி கண்ட அழகான பெண் நிருபரின் அழகை வர்ணித்த­தோடு அவரை மது விருந்துக்கும் அழைத்திருக்கிறார். கெய்லின் இந்தச் செய்கையால் செய்தியாளர் அதிர்ச்சிக் குள்ளானார். இதற்காக கெய்லுக்கு 7,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

வேடிக்கைக்காகத்தான் அவ்வாறு அந்தச் செய்தியாளரிடம் பேசினேன். அதற்காக நான் மிகவும் வருத்தப் படுகிறேன் என்று பின்னர் அவர் மன்னிப்புக் கேட்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பும் வகையில் கெய்ல், சக நாட்டு வீரர் பிரா­வோ­வு­டன் தான் இருக்­கும் ஒரு புகைப்­ப­டத்தை கெயில் இணை­யத்­தில் பகிர்ந்­துள்­ளார். அதில் 'செக்ஸ்­செல்ஸ்' என்று எழு­தப்­பட்­டுள்ள 'டி சர்டை' அணிந்­துள்­ளார். மேலும் தனக்கு விதிக்­கப்­பட்ட அப­ரா­தத்தை கிண்டல் செய்­யும் வித­மாக "என் பணப் பை காலி­யாக உள்­ளது. எனவே இன்று இரவு உண­வுக்­கான பணத்தை பிரா­வோ­வின் கொடுக்­கிறார்," என்று எழு­தி­யுள்­ளார்.2016-01-07 00:36:05 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!