லெஸ்டரை வீழ்த்திய ஸ்பர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ண மூன்றாவது சுற்றுக் காற்பந்துப் போட்டி ஒன்றில் பிரிமியர் லீக் தரவரிசைப் பட்டி யலில் ஆர்சனல் குழுவுடன் முதலிடம் வகிக்கும் லெஸ்டர் சிட்டி குழுவை நேற்று அதிகாலை டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு 2=0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. எனினும், ஸ்பர்ஸ் குழுவும் தர வரிசையில் முன்னணியில் இருப்பதால் நேற்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இதற்கு மாறாக, நேற்றைய ஆட்டம் ஒருதலைப்பட்ச மாக இருந்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. இந்த ஆட்டத்தில் லெஸ்டர் சிட்டி குழு ஸ்பர்ஸ் குழுவுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் பாயர் லவகுசனிலிருந்து புதிய வரவான சோன் ஹியுங் மின் என்ற தென்கொரிய வீரர் கிட்டத்தட்ட 18 மீட்டர் தூரத்திலிருந்து அடித்த பந்து சீறிப் பாய்ந்து லெஸ்டர் கோல் வலைக்குள் சென்றது. இவரது தாக்குதல் விளை யாட்டு நேற்றைய ஆட்டத்துக்கு விறுவிறுப்பைக் கூட்டியதாகக் கூறப்படுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவின் முன்னணித் தாக்குதல் ஆட்டக்காரர்களான ஹேரி கேன், டெலி அலி, லெஸ்டர் சிட்டியின் அதிரடி ஆட்டக்காரர்களான ஜேமி வார்டி, ரியாட் மஹ்ரேஸ் ஆகியோர் மாற்று ஆட்டக் காரர்களாக ஒதுங்கியிருக்க, இந்த எஃப்ஏ கிண்ணப் போட்டி யில் களமிறங்கிய வீரர்கள் தாங்களும் லீக் போட்டியில் விளையாடும் தகுதி பெற்றவர்களே என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்தனர். இவர்களில் எட்டு மாற்று ஆட்டக்காரர்களைக் கொண்டு களமிறங்கிய ஸ்பர்ஸ் குழுவில் சோன் ஹியுங் மின் என்பவருக்கே அதிக தகுதி இருந்ததாக காற் பந்து ரசிகர்கள் கருத்துக் கூறு கின்றனர். இவரே ஸ்பர்ஸ் குழுவின் இரண்டாவது கோலுக் கும் காரணமாக இருந்தார்.

ஸ்பர்ஸ் குழுவின் தென்கொரிய ஆட்டக்காரர் சோன் ஹியூங் மின் (வெள்ளைச் சீருடை) சுமார் 18 மீட்டர் தொலைவில் இருந்து உதைத்த பந்து மின்னலெனப் பாய்ந்து எதிரணியின் வலைக்குள் புகுந்தது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!