மாணவர்கள் தயாரித்த தானியக்க மேடையுடன் சக்கர நாற்காலி

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரி மாணவர்கள், முதியோர் களுக்கு வசதியாக சக்கர நாற் காலியில் சாய்மேடை ஒன்றை அமைத்து புதுமை செய்துள்ளனர். இதன் உதவியுடன் வீவக வீட்டுக்குள் முதியோர்கள் தங்குத்தடையின்றி நுழைய முடியும். நுழைவாயிலில் உள்ள படிக் கட்டுகளை கடந்து செல்வதற்கு ஏதுவாக சக்கர நாற்காலியில் தானியக்க மேடையை அவர்கள் இணைத்துள்ளனர். சிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரியின் பொறியியல் கண் காட்சியில் இந்தப் புதிய வகை சக்கர நாற்காலி காட்சிக்கு வைக்கப்பட்டது.

அன்றாட வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மாண வர்களின் பலதரப்பட்ட படைப்பு கள் காணப்பட்டன. வானூர்தி பொறியியல் துறை யைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் மேடை இணைக்கப்பட்ட சக்கர நாற்காலியை உருவாக்கியிருந் தனர். எட்டு மாத உழைப்பில் 3,000 வெள்ளிக்கும் குறைவான செலவில் சக்கர நாற்காலி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூரோங், புக்கிட் பாத்தோக், யீ‌ஷூன், அங் மோ கியோ, தெம்பனிஸ் போன்ற இடங்களில் வீவக வீடுகளில் வசிக்கும் சுமார் 75,000 குடி யிருப்பாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேடையுடன் சக்கர நாற்காலியை வடிவமைத்த சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பொறியியல் துறை மாணவர்கள் (இடமிருந்து) டான் ஜுன் ரென், ரோய் டான் ஜியா ஜிங், திலான் கொன்சைசியோ, லிம் லு சின், கிளாரென்ஸ் தெங். அனைவருக்கும் வயது 19. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!