பார்க்லேஸ் வங்கியில் ஆட்குறைப்பு; சிங்கப்பூரில் பாதிப்பில்லை

உலக முழுவதும் உள்ள பார்க்லேஸ் வங்கியில் 1,000 பேர் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றனர். ஆனால் சிங்கப்பூரில் உள்ள அந்த வங்கியின் கிளையில் பணி யாற்றும் ஊழியர்களுக்கு பாதிப் பிருக்காது என்று கூறப்படுகிறது. பார்க்லேஸ் வங்கியில் வேலை இழக்கும் 1,000 பேரில் 230 பேர் ஆசியாவில் பணியாற்றும் ஊழி யர்கள். இருப்பினும் சிங்கப்பூரில் பங்கு வர்த்தகம், நாணய பரிவர்த்தனைக் குழுவில் உள்ள 10க்கும் மேற்பட்டோர் வேலை இழக்கக்கூடும் என்று பார்க்லேஸ் சிங்கப்பூருக்கு நெருக்கமான தகவல் தெரிவிக்கின்றன.

"வர்த்தகப் பிரிவில் உள்ள வர்கள் மட்டுமே பாதிக்கப்படுவர். மற்றவர்கள் வேலையில் தொடர்ந்து நீடிப்பார்கள்," என்றும் அந்த தகவல் குறிப்பிட்டது. சீனா, இந் தியா, சிங்கப்பூர், ஹாங்காங், ஜப் பான் ஆகிய நாடுகளில் பார்க்லேஸ், தனது முதலீட்டு துறையில் முக்கிய கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், ரஷ்யா ஆகிய நாடு களில் முதலீட்டு துறையிலிருந்து பார்க்லேஸ் விலகுவதாகவும் தெரி விக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!