மா. அன்பழகனின் 9 நூல்கள் அறிமுக விழா

கடந்த ஞாயிறு மாலை உமறுப் புலவர் தமிழ் மொழி நிலை­யத்­தில் எழுத்­தா­ளர் மா. அன்­ப­ழ­க­னின் ஒன்பது நூல்­களின் அறிமுக விழா நடந்­தே­றி­யது. மேடைக்­குச் செல்­லா­மல் மக்­க­ளோடு மக்­க­ளாக கலந்துகொண்டு டாக்டர் எம். ஏ. காதர் தொய்­வின்றி விழாவை நடத்­திச் சென்றார். நூல்கள் பற்றிய தங்கள் கருத்­து­களை 21 பேர் மன்றத்­தில் பகிர்ந்­து­கொண்ட­னர். நிதி, சட்ட மூத்த துணை அமைச்­சர் குமாரி இந்­தி­ராணி ராஜா நூல்களை வெளி­யிட்­டார். மாணவர் கடித இலக்­கி­ய­மான 'கூவி அழைக்­குது காகம்' எனும் நூலைச் சுமார் 150 மாண­வர்­கள் படித்து அதனால் பெற்ற பலன்களை இடையே கேள்­விக்­குப் பதிலாக சொன்­ன­தும் உம­றுப்­பு­ல­வர் பள்­ளி­யில் அந்த மாண­வர்­கள் கூடி படித்­த­தும் விவாதம் செய்­த­தும் நிலையத் தலைவர் இரா. அன்­ப­ரசு ஏற்­பாட்­டில் வெண்­திரை­யில் படம்பிடித்­துக் காண்­பிக்­ கப்­பட்­டது.

மாலை, பொன்னாடை, நினைவுப் பொருள், தமிழ் வாழ்த்து, வர­வேற்­புரை, தலைமை­யுரை, வாழ்த்­துரை, சிறப்­புரை, ஏற்புரை, முதல் பிரதி பெறுதல் என்பன போன்ற சம்­பி­ர­தா­யங்கள் ஏதும் இல்­லா­மல் கலந்­துரை­யா­டலா­க­ வும் கேள்வி பதி­லா­க­வும் விழா வித்­தி­யா­ச­மாக நடை­பெற்­றது.

நூலாசிரியர் மா. அன்பழகன் அருகில் நிற்க அமைச்சர் இந்திராணி ராஜா மாணவர்களுக்கு நூல்களை வழங்குகிறார். படம்: மா. அன்பழகன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!