இந்திய அணியின் ஆறுதல் வெற்றி எதிர்பார்ப்பு

சிட்னி: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. டோனி தலைமையிலான இந்திய அணி 4 போட்டியிலும் தோற்று மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதனால் நாளைய ஆட்டத்திலாவது இந்திய அணி வெற்றி பெற்று ஆறுதல் பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது. கேன்பெராவில் நடந்த 4வது ஆட்டத்தில் வெற்றி பெற இருந்த வாய்ப்பை இந்திய வீரர்கள் வீணடித்துவிட்டனர். டோனியின் தவறான அணுகுமுறை பாதிப்பை ஏற்படுத்தியது. புதுமுக வீரர்கள் குர்கெரத் சிங், ரி‌ஷிதவான் ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வில்லை. இருவரும் நாளைய ஆட்டத்தில் நீக்கப்படலாம். கடந்த இரண்டு போட்டி யிலும் நீக்கப்பட்ட அஸ்வின் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

பேட்டிங்கில் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா ஆகியோர் மட்டுமே நல்ல நிலையில் உள்ளனர். ரகானே காயம் அடைந்து இருப்பதால் இன்று ஆடுவாரா என்பது உறுதியில்லை. நான்கு ஆட்டத்திலும் வென்று முத்திரை பதித்த ஆஸ்திரேலியா இந்தப் போட்டியிலும் வென்று 5-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்ச்சிக்குத் தள்ளும் ஆர்வத் துடன் உள்ளது. சொந்த மண்ணில் தொடர்ச்சி யாக 18 வெற்றியைப் பெற்ற அந்த அணி அதைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் போராடும். 2014 நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்ற பிறகு ஆஸ்திரேலியா இதுவரை சொந்த மண்ணில் வீழ்ந்தது இல்லை. இன்றைய ஆட்டம் காலை 8.50 மணிக்குத் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!