தொழிலாளர்களை பாதிக்கும் மலிவு விலைக் கார் சந்தை

ஜெனரல் மோட்டோர்ஸ், ஃபோர்ட் மோட்டோர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த மலிவு விலைக் கார் உற்பத்தியில் முழுவீச்சில் இறங்கியுள்ளது. அதனால், இந்தியா தெற்காசிய வட்டாரத்தின் மலிவு விலைக் கார் மையமாகி வருகிறது. இந்தியாவின் மலிவு விலை கார் சந்தை பெரியளவில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் மூன்று டாலர் நாள் கூலிக்கு 12 மணிநேரம் கடுமையாக உழைக்கும் ஆயிரக்கணக்கான எளிய, ஏழைத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணியிடப் பாதுகாப்பு, முறையான பயிற்சி, காப்பீடு என்று எதுவும் இருப்பதில்லை.

கீழ் மட்டத்தில் உழைக்கும் இவர்களின் நிலை குறித்து பெரிய கார் நிறுவனங்களுக்கு எதுவும் தெரிவதில்லை. அண்மையில் பயிற்சி இல்லாமல் இயந்திரத்தை இயக்கிய விஸ்வேஷ்வர், 51, தொழிற்சாலையில் தனது கையை இழக்க நேரிட்ட சம்பவம் கார் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஃபரிதாபாத்தின் சிறிய தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்கள் மும்முரமாகப் பணியில் ஈடுபடுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!