‘எளிமையான முறைகள் தேவை’

வருங்காலத்தில் சுரங்கப்பாதை களுக்கான கட்டுமானப் பணிகள் மேலும் அமைதியாக நடைபெறும் என்றும் குறுகிய காலகட்டத்தில் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்மாடிக் கட்டட கட்டுமானத் திட்டங்களுக்கான கட்டமைப்பை சுரங்கப் பாதைகளுக்கும் விரிவாக்கவிருப்பதாகக் கட்டட, கட்டுமான ஆணையம் கூறியது. புதிய கட்டுமானக் கட்டமைப் பின்கீழ் குறைந்த அளவிலான ஊழியர்களைப் பயன்படுத்தும் உத்தியையும் தொழில்நுட்பத் தையும் வடிவமைப்பாளர்களும் கட்டுமானத் துறையினரும் பயன்படுத்த வேண்டும்.

இதற்கு உட்பட்டு செயல்படாத வர்களுக்குத் தண்டனை விதிக் கப்படும். உதாரணத்திற்கு, கட்டுமானப் பணிகளுக்கு இயந்திரங்கள், முன்கூட்டியே கட்டப்பட்டுப் பொருத்தப்படும் பகுதிகள் (Prefabrication) முதலியவற்றைப் பயன்படுத்தலாம். கட்டுமானப் பகுதிகளை வேறு ஓர் இடத்தில் தயாரித்துக் கட்டுமானத் தளத்திற்கு அவற்றைக் கொண்டு வந்து பொருத்துவதால் தோண்டும் பணிகளால் ஏற்படும் சத்தத்தைக் குறைக்கலாம் என்றும் தெரி விக்கப்பட்டது.

அடுத்த சில ஆண்டுகளில் சிங்கப்பூரில் கட்டுமான பொறி யியல் திட்டங்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்ப்பதாக ஆணையத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் ஜான் குங் கூறினார். "இவை கட்டடங்கள் அல்ல. இருப்பினும், இவற்றை எளிய முறையில் கட்ட சுரங்கப்பாதை கட்டுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய உத்தி முறைகளை கையாள வேண்டும்," என்று டாக்டர் குங் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!